» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டையால் தாக்கி வழிப்பறி: மர்ம நபர்கள் கைவரிசை

புதன் 15, மே 2019 11:16:52 AM (IST)

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியை கட்டையால் தாக்கி பணத்தை பறித்துச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பரமசிவன் (52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று தூத்துக்குடி பீச் ரோட்டில நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி, அவரிடம் இருந்து ரூ.3ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றார்களாம். இதில் காயம் அடைந்த பரமசிவன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 2பேரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications




Thoothukudi Business Directory