» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேருக்கு போலீஸ் வலை!!

புதன் 15, மே 2019 11:10:46 AM (IST)

தூத்துக்குடியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஜெயராஜ் (20), இவர் தனது  நண்பர்களுடன் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் 2பேர் அவரை கத்தியால் குத்தினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 2பேரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Black Forest Cakes



Anbu Communications




Thoothukudi Business Directory