» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரை ரூ. 1.50 கோடி பறிமுதல்: ஆட்சியர்

புதன் 15, மே 2019 9:03:27 AM (IST)ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ. 1.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி என்று கூறினார்.
 
தூத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 70 சதவீத வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஏறத்தாழ 1500 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெயசீலா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் மாற்றுத்திறானாளிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory