» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

புதன் 15, மே 2019 8:56:57 AM (IST)

கழுகுமலை அருகே கல்லூரி மாணவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையையடுத்த கரடிகுளம், சி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் மகன் யோகக்குமார்(21). திருச்செங்கோட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் இவர் ஊர் திருவிழாவிற்காக வெள்ளிக்கிழமை(மே. 10)ஆம் தேதி அவரது உறவினர் முகேஷ் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார்(21) ஓட்டி வந்த ஆட்டோ, பைக்கின் மீது மோத முயன்றததாம். அதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். 

இதையடுத்து, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யோகக்குமாரை, ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான பாலமுருகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த ரெங்கசாமி ஆகியோர் தாக்கினார்களாம். இதுகுறித்து, கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, அவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், ரெங்கசாமி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory