» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் சார்பில் கோடைகால கம்யூட்டர் பயிற்சி முகாம் தொடக்கம்

செவ்வாய் 14, மே 2019 4:50:28 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் இளைஞர்களுக்கான கோடை கால கம்யூட்டர் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. 

தூத்துக்குடி பகுதியின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, இளைஞர்கள் நலன் மற்றும் மாணவர்களின் திறன் வளர்ப்பு, கல்வி போன்றவற்றிற்காக வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த கோடைகால விடுமுறையை முன்னிட்டு, சீதா திறன் வளர்ப்பு மையத்துடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக அடிப்படை கம்யூட்டர் மற்றும் டேலி ஆகிய பயிற்சிகளை அளிக்க இருக்கிறது. தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த பயிற்சி முகாம் நேற்று முதல் துவங்கியது.

30 நாட்கள் அளிக்கப்படும் இந்த கோடைகால விடுமுறை பயிற்சி திட்டத்தில் 8ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அடிப்படை கம்யூட்டர் பயிற்சியும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டேலி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் இணை துணை தலைவர் சுமதி தலைமை வகித்தார். சீதா திறன் வளர்ப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி கருணாகரன் முன்னிலை வகித்தார். மேலும், ஸ்டெர்லைட் அலுவலர்கள் நிஷின், சுகந்தி செல்லதுரை, ஜெயஸ்ரீ மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமிமே 15, 2019 - 07:58:14 PM | Posted IP 162.1*****

சரியா சொன்னீர்கள் திருட்டு பயல்..

ராமநாதபூபதிமே 15, 2019 - 10:43:33 AM | Posted IP 172.6*****

இப்படியே ஒரு நாள் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் என்று ஒருநாள் செய்தி வரும் அன்று தான் மக்கள் விழிப்பார்கள்

manithanமே 15, 2019 - 10:05:32 AM | Posted IP 141.1*****

tutionline அரசு சார்பாக இதுபோன்று நிறைய வகுப்புகள் ஊக்க தொகையுடன் அணைத்து காலங்களிலும் நடைபெறுகிறது. இதை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லுங்க.. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரொம்ப ஜால்ரா போடா வேண்டாம். எல்லோரும் முட்டாள் இல்லை.

ஜான்மே 15, 2019 - 08:09:30 AM | Posted IP 172.6*****

நல்ல பெயர் எடுக்க நாடகம். நீ நல்லது செய்யணும்னு நினைச்சா எங்க ஊர விட்டு போ

மக்கா!!மே 14, 2019 - 11:55:58 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்! நற்பணி தொடரட்டும்!!

விஜய்மே 14, 2019 - 06:16:31 PM | Posted IP 172.6*****

டூட்டி ஒன்லைன் நல்ல ஜால்ரா வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனதிற்கு

விஜய்மே 14, 2019 - 06:09:40 PM | Posted IP 172.6*****

கேடு கெட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோடை கால கம்யூட்டர் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு தேவை இல்லை

பாலாமே 14, 2019 - 06:07:27 PM | Posted IP 162.1*****

அடேய் நீங்க இன்னும் ஊரை காலி பண்ணலியா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Joseph Marketing


Nalam Pasumaiyagam


New Shape Tailors


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory