» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் விற்பனை : பொதுமக்கள் புகார்!!

செவ்வாய் 14, மே 2019 4:29:23 PM (IST)தூத்துக்குடி மணிநகர், டூவிபரம் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மணிநகர், டூவிபரம் பகுதி பொதுமக்கள் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி, பாளை ரோடு ராஜாஜி பூங்காவிற்கு எதிர்புறம் உள்ள ரோட்டில் பல்வேறு அலுவலகமும், குடியிருப்பு வீடுகளும் உள்ளது. இப்பகுதியில் இரண்டு இடங்களில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியின்றி சட்டத்திற்கு விரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றார்கள். இது குறித்து தெருவாசிகள் பலர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

நிலத்தடி நீரை எடுத்து செல்லும் வாகனங்களால் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் தினசரி 10க்கும் அதிகமான லாரிகள், டிராக்டர்களை சாலையின் இருபுறமும் நிறுத்துவதினால் போக்குவரத்திறக்கு இடையூராகவும் இருந்து வருகின்றது. எனவே, சட்டத்திற்கு விரோமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்க்கவும், சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

jeyaseelanமே 15, 2019 - 06:10:29 PM | Posted IP 173.2*****

காய் கனி மார்க்கெட் கிரௌண்ட் பின் பக்கம் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கின்றார் ஒரு சொட்டை தலையன் . சபின்னிங் மில் பின் பக்க ரோடு ... டெய்லி 5 அல்லது 6 வண்டி.

ராஜாமே 15, 2019 - 05:57:32 PM | Posted IP 162.1*****

சின்னமணி நகர் பக்கத்திலும் இது நடக்கிறது...ஸஃபின்னிங் மில் BACK SIDE

நிஹாமே 15, 2019 - 12:46:50 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிக வெளிப்படையாகவே இது நடந்து கொண்டிருக்கிறதே. அதிகாரிகளுக்கு இது தெரியாது என்று நம்ப முடியாது.

சிவராம்மே 15, 2019 - 12:21:35 AM | Posted IP 172.6*****

மாசா, மாசம் அதிகாரிகளுக்கு கப்பம் கரெக்டா போகுதுல்ல... பின்ன எப்படி? நடவடிக்கை?

இவன்மே 14, 2019 - 07:21:48 PM | Posted IP 162.1*****

திருட்டு திராவிட ஆட்சியில் குடிநீருக்காக அவலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory