» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைத்தேர்தலை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு

திங்கள் 13, மே 2019 3:56:12 PM (IST)

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மே 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான 23ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2019ம் ஆண்டு 217 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 17.05.2019 காலை 10.00மணி முதல் 19.05.2019 நள்ளிரவு 12 மணிவரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23.05.2019அன்றும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணைவிதி (2)-ன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2, மற்றும் எப்.எல்.3 (எப்.எல்.6தவிர) உரிமதலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education

Joseph Marketing


Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thoothukudi Business Directory