» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருமண மண்டபத்திற்கு சீல் வைப்பு : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 5:12:48 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக பிரமுகர் குத்தகை பணம் செலுத்தாததால் மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் சிவன் கோயில் அருகே உள்ளது. இந்த மண்டபம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் வாரிய தலைவர் அமிர்த கணேசன் என்பவர் குத்தகை அடிப்படையில் இதனை எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆண்டிற்கான குத்தகைப் பணம் ரூ.15 லட்சத்தை அவர் மாநகராட்சி நிர்வாகத்திடம் செல்லவில்லையாம். இதற்காக அவர் கொடுத்த காசோலை, பணம் இல்லை என்று திரும்பி வந்தது. 

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் இல்லையாம். இதையடுத்து அந்த மண்டபத்தை அவர் பயன்படுத்த தடை விதித்து மண்டபத்திற்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையர் சந்திரமோகன், உதவி வருவாய் அலுவலர் தனசிங், வருவாய் ஆய்வாளர் கணேசன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை மண்டபத்திற்கு சீல் வைத்தனர். தூத்துக்குடியில் மாநகராட்சி மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து

நிஹாமே 2, 2019 - 03:42:40 PM | Posted IP 172.6*****

இலவசம் என்றால் உண்மையில் இலவசமாக கிடைக்காது. மண்டபத்தை ஒதுக்குபவருக்கு லஞ்சமே பெரிய தொகையாக வந்துவிடும்.

குமார்மே 2, 2019 - 10:48:07 AM | Posted IP 172.6*****

மாநகராட்சி நிர்வாகம், இந்த திருமண மண்டபத்தை...சிவன் கோவிலில் வைத்து திருமணம் நடத்தும் ஏழை குடும்பத்தினருக்கு இலவசமாக திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு வழங்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer EducationNew Shape Tailors

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph MarketingThoothukudi Business Directory