» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவ மக்கள் கறுப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 7:35:51 PM (IST)இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து ஆலந்தலை கிராம மக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். மேலும் சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மற்றும் பைபர் படகுகள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இதனால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவ கிராம மக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். 

ஆலந்தலை திருஇருதய அற்புதக்கெபி ஆலயம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு துணை பங்குதந்தை ஜான்சன் தலைமை வகித்தார். ஊர்த்தலைவர் தொம்மை முன்னிலைவகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களும், பெண்களும், பள்ளி, சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். பின்னர் துணை பங்குதந்தை ஜாண்சன் தலைமையில் அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு ஆலயத்திலிருந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.  

தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மற்றும் பைபர் படகு சமுதாய சங்கம் சார்பில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நேற்று கடலுக்கு செல்லாமல் மீன்பிடித்தொழிலை புறக்கணித்தனர். இதனால் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான நாட்டுபடகுகள் மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. 

திருச்செந்தூரில் அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆண்களும், பெண்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் தேரடி திடலிருந்து துவங்கி அமலிநகர் அமலி அன்னை ஆலயத்தில் முடிவடைந்தது. இதில் அமலிநகர் ஊர்த்தலைவர் செல்வராஜ், புன்னக்காயல் சேகர், அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் உட்பட 400க்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

samiApr 24, 2019 - 07:37:29 PM | Posted IP 172.6*****

சக மனிதருக்கு ஆபத்து எனும்போது அதில் வேடிக்கை வேண்டாம் நண்பரே

மீனவன்Apr 24, 2019 - 03:13:08 PM | Posted IP 141.1*****

ஓன்று பட்டால் தானே வாழ்வு பிம்பிலிக்கா பிளாப்பி சிதறுண்டு மடிவதல்லவோ நம் தமிழ் இனம்

பிம்பிலிக்கா பிளாப்பிApr 24, 2019 - 12:24:12 PM | Posted IP 162.1*****

பிம்பிலிக்கா பிளாப்பி

மீனவன்Aug 29, 1556 - 11:30:00 PM | Posted IP 162.1*****

நண்பா உன் வீட்டில் துக்கத்தில் சிரிப்பவரா நீர் நண்பா அதற்க்கு வேறு பெயர் உண்டு (சைக்கோ )

சாமான்யன்Apr 23, 2019 - 09:06:31 PM | Posted IP 172.6*****

சிரிப்பு வருது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory