» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் இடி,மின்னலுடன் கொட்டிய கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 6:41:50 PM (IST)கோவில்பட்டி பகுதியில் பலத்த இடி,மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பத்தின் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். மழை பெய்யாதா என்று ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று பகலில் கடுமையான வெயில் அடித்தாலும், மதியம் நேரத்திற்கு மேலாக வெயிலின் தன்மை குறைந்து காணப்பட்ட நிலையில் தீடீரென மழை பெய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 

முதலில் லேசாக தொடங்கிய மழை நேரம் செல்ல, செல்ல பலத்தமழையாக மாறியது. சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். கோவில்பட்டியை போன்றே கயத்தார் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. மேலும் இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம், வானரமுட்டி, நாலாட்டின்புதூர், கழுகுமலை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இது தவிர பல இடங்களில் அதிகளவில் காற்றும் வீசியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam
CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory