» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேரளாவில் பில்லா ஜெகன் போலீசாரால் சுற்றி வளைப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 6:20:32 PM (IST)

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை திமுக நிர்வாகி பில்லா ஜெகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கேரளாவில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்..

தூத்துக்குடி மட்டகடை, காளியப்ப பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சேசு பர்னாந்து. இவருக்கு 4 மகன்கள். இதில், 2வது மகன் பில்லா ஜெகன் (45). தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் ஆவார். மேலும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார்.  இவரது கடைசி தம்பி சிமன்சன் (33). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. சகோதரர்கள் 4பேரும் லாரி செட் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பில்லா ஜெகனுக்கும் அவரது தம்பி சிமன்சனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.இந்த பிரச்சினையால் சிமன்சனின் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று பிற்பகலில் சிமன்சன் தனது மனைவியை சமரசம் செய்து அழைத்து வர மணப்பாடு சென்றார். அதன் பிறகு இரவு வீட்டிற்கு வந்த சிமன்சன், தனது அண்ணனிடம் லாரி தொழிலில் பங்கு தருமாறு கேட்டார். அதற்கு பில்லா ஜெகன் மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பில்லா ஜெகனின் மற்ற சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றிரவு வெகு நேரம் வரை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் பில்லா ஜெகனுக்கும், சிமன்சனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிமன்சனை சுட்டார். இதில் அவரது தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. உயிருக்கு போராடிய சிமன்சனை அவரது நண்பர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிமன்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிமன்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளிரம்பா, டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். தலைமறைவாக உள்ள பில்லா ஜெகனை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே தப்பி சென்ற பில்லாஜெகன் கேரளாவில் காரில் சென்றாராம். அப்போது வாகனசோதனை மேற்கொண்டிருந்த  போது பில்லாஜெகன் சென்ற காரை நிறுத்தி கேரள போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

பில்லாஜெகனிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விபரத்தை கூறியுள்ளார். உடனே கேரளா போலீசார் தூத்துக்குடி போலீசாரை தொடர்பு கொண்டு விஷயத்தை தொிவித்தனர்.அதன் பேரில் தூத்துக்குடி போலீசார் உடனே பில்லாஜெகனை அழைத்து வர கேரளா விரைந்துள்ளனர். அவர் இன்று இரவு தூத்துக்குடி கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory