» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டம்: கோவில்பட்டியில் பரபரப்பு... போக்குவரத்து பாதிப்பு!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 4:38:37 PM (IST)கோவில்பட்டியில் அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், பஸ் நிலையத்தில் குறுக்கும் மறுக்குமாக பஸ்களை நிறுத்தி பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த டிரைவர்  வெள்ளாங்கோட்டை சுப்பையா மகன் கிருஷ்ணசாமி(40). சாத்தூர் பணிமனையை சேர்ந்த டிரைவர் சாத்தூர் வட்டம் வன்னிமடையை சேர்ந்த சந்தானமுத்து மகன் சொரூபராஜ்(40). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 நாட்களுககு முன் மதுரை செல்லும் பஸ் நிலையத்தில் இருந்து யார் முதலில் பஸ்சினை எடுத்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சினை எடுப்பதில் மீண்டும் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாத்தூர் பணிமனை சேர்ந்த டிரைவர் சொரூபராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீஸார் பஸ் நிலையத்துக்கு வந்து கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதில், காவல் நிலையத்தில் தன்னை போலீஸார் தாக்கியதாக கிருஷ்ணசாமி சக ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அரசு பஸ் ஓட்டுநர்கள் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நின்ற அனைத்து அரசு பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்தினர். மேலும், பேருந்து நிலையத்துக்கு வெளியேயும்  பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் ஐயப்பன், சுதேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், சாத்தூர் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக கூறினர். இதனால் போலீஸாரே அரசு பஸ்களை இயக்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர். மேலும், கோவில்பட்டி, சாத்தூர் பணிமனை மேலாளர்கள் ரமேஷன், சுப்பிரமணியன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, டிரைவர், நடத்துனர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் கைது

செவ்வாய் 12, நவம்பர் 2019 10:46:36 AM (IST)

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory