» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் : ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் : ஆட்சியர்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 3:46:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் எழுத்துப் பூர்வமாக 02.05.2019க்குள் தெரிவிக்க வேண்டும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்திட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், நகர்புற உள்ளாட்சிக்கான வரைவு வாக்குசாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் 23.04.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்புடைய அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குசாவடி பட்டியல்களை பார்வையிட்டு தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலோ எழுத்து மூலமாக 02.05.2019 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

CSC Computer Education


Nalam PasumaiyagamThoothukudi Business Directory