» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 3:31:20 PM (IST)

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடல் வழியில் இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை உள்ளதால், அங்கிருந்து நமது நாட்டுக்குள்ளும் பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இந்தியாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் இன்று 3வது நாளாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

தீவிரவாத அமைப்புகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வாண் தீவு, காசு வாரி தீவு, பாண்டியன் தீவு, ஆகிய தீவுகளில் அன்னிய படகுகள் ஊடுருவல் உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி, மண்டபம், காரைக்கால் ஆகிய இடங்களில் கடலோரக் காவல்படை மையங்களில் உள்ள அனைத்துக் கப்பல்களும், விமானங்களும் முழுவீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்த உடனேயே கடல் பகுதி எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

உண்மைApr 24, 2019 - 12:21:09 PM | Posted IP 162.1*****

இது மோடி சர்க்கார்! அச்சம் வேண்டாம் மக்களே! தீவிரவாதிகளை அழிப்பதே இலக்கு! ஜெய்ஹிந்த்!

சாமிApr 23, 2019 - 06:08:30 PM | Posted IP 172.6*****

தீவிரவாதின்னு தெரிஞ்சா எனக்கவுண்டர்ல போட்டுருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory