» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோடைகால இலவச பயிற்சி முகாம் : மே 1ஆம் தேதி தொடங்குகிறது.

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 3:18:41 PM (IST)

தூத்துக்குடியில் மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற மே 1ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு 21 நாட்கள் மே 1 முதல் 21ஆம் தேதி வரை வரை 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி, அறிவியல் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை. என தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory