» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

சனி 20, ஏப்ரல் 2019 4:36:22 PM (IST)

தூத்துக்குடி அருகே இரு வேறு இடங்களில நிகழ்ந்த பைக் விபத்தில் 2 வாலிபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலைய்யா மகன் ராஜபாண்டி (35), ஜோதிமணி மகன் பாலசுந்தர் (19), ஆலங்குளம் வேலுச்சாமி மகன் மணிராஜ் (22). இவர்கள் மூவரும் கடந்த 14ஆம் தேதி மதியம் 2 மணியளவில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து குலசேகரநல்லூர் நோக்கி ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ராஜபாண்டி ஓட்டிச் சென்றார். 

மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  இந்த பைக் ஓட்டப்பிடாரம் -  திருநெல்வேலி விலக்கு ரோட்டில் திரும்பும்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 3பேரும் படுகாயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜபாண்டி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு விபத்து 

தூத்துக்குடி வாகைகுளத்தைச் சேர்நதவர் வைரமுத்து மகன் மாரியப்பன் 35. இவர் கடந்த 18ஆம் தேதி தனது பைக்கில் வாகைகுளம் சந்திப்பில் சென்றுகொண்டிருந்த போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த திம்மராஜபுரத்தைச் சேர்ந்த கடற்கரை மகன் ரமேஷ் (22) என்பவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory