» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை

சனி 20, ஏப்ரல் 2019 1:58:55 PM (IST)



தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு, அமைதி, நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பௌர்ணமி திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகசாமி செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Anbu Communications





Thoothukudi Business Directory