» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

சனி 20, ஏப்ரல் 2019 11:50:27 AM (IST)

தூத்துக்குடியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் கோடை வெப்பம் தனிந்து மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது. கடும் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத வெப்பம் நிலவியது. இந்நிலையில் தூத்துக்குடி நகர் பகுதியில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. தொடர்ந்து காலையிலும் சிறிது நேரம் மழை பெய்தது. தூத்துக்குடியில் கோடை மழை துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory