» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர் கொலை? போலீஸ் விசாரணை

சனி 20, ஏப்ரல் 2019 11:34:13 AM (IST)

தூத்துக்குடி கடற்கரையில் மீனவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டார என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் ஜாஸ் மகன் முத்துசெல்வம் (23). மீனவரான இவர் இன்று காலை 9 மணியளவில் அப்பகுதி கடற்கரையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தருவைகுளம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், முத்து செல்வன் உடலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது தந்தை ஜாஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொர்பாக மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து செல்வனுக்கு தேன்மொழி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடலைப் பார்த்து மனைவியும் குழந்தைகளும கதறி அழுது மிகவும் பரிதாபமாக இருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory