» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

சனி 20, ஏப்ரல் 2019 11:16:43 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் குமரகுரு (34). பெட்ரோல் பல்க் ஊழியர். இவரது மனைவி பானுபிரியா (27). இந்த தம்பதியருக்கு 3 வயது ஆண் குழநதை உள்ளது. இந்நிலையில், குமரகுருவுக்கு மதுபழக்கம் இருந்ததால் சம்பளத்தை மது குடித்தே செலவழித்து விடுவாராம். இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த குமரகுரு தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முததையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory