» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓட்டுபோட வந்த வாலிபர் படுகொலை : இருவர் கைது

சனி 20, ஏப்ரல் 2019 10:49:00 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் மோகன் (32) லாரி டிரைவர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்ப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். பின்னர் தனது மனைவி குழந்தைகளுடன் தேனி மாவட்டம் கம்பத்தில் குடியிருந்து வந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காகவும், தேர்தலில் வாக்களிப்பதற்காகவும் தூத்துக்குடி வந்து பக்கிள்புரத்தில் தனது தாய் சரோஜா வீட்டில் தங்கியிருந்தார். 

இந்நிலையில், நேற்று மாலை இவரது நண்பர்களான போல்டன்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜெபஸ்தியான் (32), ஆறுமுகம் மகன் ராஜ் (32), ஆகியோர் மோகனின் தாயார் குறித்து தவறாக பேசி வந்தார்களாம். இதனால் மோகனுக்கு  அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அவர்கள் இருவரையும் தனது செல்போனில் பக்கிள்புரத்திற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை இரும்பு கம்பியால் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அதனை அவர்கள் இருவரும் அதனை தடுத்து திருப்பி தாக்கியுள்ளனர். 

மேலும், தாங்கள்மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மோகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கிருஷ்ணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய ஜெபஸ்தியான், ராஜு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தை டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். இந்த சொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

Joseph Marketing


New Shape Tailors




Thoothukudi Business Directory