» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புறா பிடிக்கச் சென்றாபோது கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவர் பரிதாப சாவு!!

சனி 20, ஏப்ரல் 2019 8:21:24 AM (IST)

கோவில்பட்டி அருகே புறா பிடிக்கச் சென்றாபோது கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவர் இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி - பசுபதி தம்பதியின் மகன் சக்திமாரியப்பன்(18). தற்போது பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், நேற்று  நண்பர்களோடு அதே பகுதி விஸ்வநாத நகர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்கு புறா பிடிக்கச் சென்றாராம். அப்போது எதிர்பாராமல் கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தாராம். தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு படையினர்  அங்கு சென்று,  சக்திமாரியப்பனை சடலமாக மீட்டனர்.  இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory