» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணப்பட்டுவாடாவுக்கு தேர்தல் அலுவலர் உடந்தை : தூத்துக்குடி ஆட்சியரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

திங்கள் 15, ஏப்ரல் 2019 8:26:33 PM (IST)

தூத்துக்குடியில் பணப்பட்டுவாடாவுக்கு உடந்தையாக இருந்ததாக தேர்தல் அலுவலர் மீது வழக்கறிஞர் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொதுசெயலாளராக உள்ளார். இவர் இன்று தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திப் நந்தூரிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது, நான் தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். இன்று மாலை சுமார் 4 மணியளவில் என்னை சந்தித்த அதிமுகவை சேர்ந்த ஒருவர் எங்கள் பகுதியில் திமுகவினர் ஓட்டுக்காக பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். உடனே நான் இது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு புகார் அளித்தேன். 

அதன்பேரில் தேர்தல் அலுவலர் சேசுராஜ் மற்றும் போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்தவர்களில் கீதா ஹோட்டலில் வேலை செய்பவர் என சொல்லப்படும் ஒருவர் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்றுவிட்டார். மற்றொருவர் ஓடி விட்டார். தேர்தல் அலுவலர்கள் இது தொடர்பாக திமுக வட்டசெயலாளர் நடராஜனை பிடித்து விசாரித்ததாக தெரிகிறது. உடனே நடராஜன் என்னிடம் வந்து இது குறித்து கேட்டு கோபம் அடைந்தார். எப்படி பறக்கும்படைக்கு நீங்கள் தகவல் அளிக்கலாம் என்றார். 

நான் இது குறித்து தேர்தல் அலுவலர் சேசுராஜிடம் கேட்ட போது, நான் கூறவில்லை. பறக்கும்படையிலிருந்த காவலர் ஒருவர் தான் உங்கள் பெயரை சொன்னார் என தெரிவித்தார். மேலும் பிடிபட்ட நபரிடம் பணம் எதுவும் கிடையாது. வெறும் நோட்டீஸ்தான் இருந்தது என்று தெரிவித்தார். தேர்தல் அலுவலரின் இந்த செயல் குறித்து நான் உடனே மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தேன். மேலும் இது குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரிடம் புகார் அளித்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தேர்தல்கமிஷன் கூறியுள்ளது. ஆனால் பொறுப்புள்ள தேர்தல் அலுவலர்களோ புகார் அளித்தவர்களை காட்டி கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடாவுக்கு உதவியாக இருந்து வருகிறார்கள். வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்கள் தேர்தல் குற்ற நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க எவ்வாறு முன் வருவார்கள் ?. ஆகவே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த தேர்தல் அலுவலர் சேசுராஜ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

குசும்பன் கோவிந்தன்Apr 17, 2019 - 06:47:00 PM | Posted IP 162.1*****

இவன் முழியே சரியல்ல, எங்கியோ பார்த்துகிட்டு இருக்கான், இவன் படத்தையெல்லாம் போட்டு ஏன் புபிளிசிட்டி குடுக்கிங்க...

M.GanesanApr 17, 2019 - 11:12:32 AM | Posted IP 172.6*****

Tharpodhu nadakkum arasialil yokkian yaar?

M.GanesanApr 17, 2019 - 11:10:25 AM | Posted IP 172.6*****

Tharpodhu nadakkum arasialil yokkian yaar?

BalajiApr 16, 2019 - 11:11:55 AM | Posted IP 162.1*****

ராமநாதபூபதி யோக்கியனோ இல்லையோ.. நடந்த மேட்டருக்கு என்ன பதில்.

ராமநாதபூபதிApr 16, 2019 - 10:03:31 AM | Posted IP 162.1*****

சொல்லிட்டான்பா யோக்கியன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory