» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருது: ஆட்சியர் தகவல்

திங்கள் 15, ஏப்ரல் 2019 4:26:53 PM (IST)

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது, தயான்சந்த் விருது மற்றும் ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருது, தயான்சந்த் விருது மற்றும் ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் "மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001" என்னும் முகவரியில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் சம்பந்தப்பட்ட விருதினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு வருகின்ற 25.04.2019-க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory