» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுகவினர் நூதனமுறையில் தேர்தல் வாக்குசேகரிப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 1:12:28 PM (IST)நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் கனிமொழியை இதரித்து பரமன்குறிச்சியில் திமுகவினர் நூதனமுறையில் வாக்கு சேகரித்தனர்.

கேஸ் சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை குறிக்கும் வகையில் கையில் கேஸ் சிலிண்டர்  மற்றும் டிவியை சுமந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனர். தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன் தலைமை வகித்தார். 

உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங்,பரமன்குறிச்சி எராட்சி திமுக செயலர் இளங்கோ,மாவட்டநெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் குமார் மற்றும்  திரளான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape TailorsBlack Forest CakesCSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory