» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர் சிக்கினார் - ரூ.60ஆயிரம் பறிமுதல்

திங்கள் 15, ஏப்ரல் 2019 10:42:18 AM (IST)

கோவில்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.60ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனை, தொட்டம்பட்டி கிராமத்தி்ல் ஒருவர், திமுகிவன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தலா ரூ.300 விநியோகம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்த தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமடம் மகன் பெருமாள் (58) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து ரூ.60ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing

CSC Computer Education



New Shape Tailors


Black Forest Cakes



Thoothukudi Business Directory