» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடற்கரை கிராமங்களில் தமிழிசை வாக்கு சேகரிப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 8:54:22 AM (IST)

விளாத்திகுளம் கடற்கரை கிராமங்களில் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் வாக்குசேகரித்தனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், விளாத்திகுளம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் குளத்தூர், இ. வேலாயுதபுரம், கலைஞானபுரம், கீழ வைப்பாறு, சிப்பிகுளம், துலுக்கன்குளம், கலைக்கூடம், மேல்மாந்தை, பெரியசாமிபுரம், மேலசண்முகபுரம், ராயப்பர்புரம், பச்சையாபுரம்,  சுப்பிரமணியபுரம், வேம்பார் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் வாக்குசேகரித்தனர். 

அப்போது, பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர். தேர்தல் முடிந்ததும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என பிரசாரத்தில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் செ. ராஜு உறுதி அளித்தார். முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஆவின் தலைவர் என். சின்னத்துரை, முன்னாள் பேரவை உறுப்பினர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல், ஒன்றியச் செயலர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

உண்மை தான்Apr 16, 2019 - 08:27:32 AM | Posted IP 141.1*****

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது ...

பாலாApr 15, 2019 - 09:55:34 AM | Posted IP 141.1*****

போங்க போங்க நல்ல குடுப்பாங்க வாங்கிட்டு வாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory