» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனிதா ஆதரவாளரிடம் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 8:29:10 PM (IST)

திருச்செந்தூர் அருகே வாகன சோதனையின் பறக்கும் படை அதிகாரிகள் காரை துரத்தி சென்று சோதனையிட்ட போது, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினரிடம் ரூ.40 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழி மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாத்தான்குளம் யூனியன் உதவி இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் கார் முதலில் ஊத்தாங்கரைவிளை ரோட்டில் சென்றது. பின்னர், சிறிது நேரத்தில் பின்னால் வந்த அந்த வாகனம் பின்னர் மெயின்ரோட்டில் செல்ல முயன்றது. இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படை அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் பின்னால் ஜீப்பில் துரத்தி சென்றனர். காரின் பின்னால் சென்ற அதிகாரிகள் மத்திமான்விளையில் வைத்து அந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரிலிருந்து ரூ.40 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் வசீகரன்(56)  என்பது தெரியவந்தது. அனிதா ஆதரவாளரான இவர் தி.மு.க.,வில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இதனால் பணத்தை பட்டுவாடா செய்வதற்கு கொண்டு சென்ற போது சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ரூ.40 லட்சம் பணம் பிடிப்பட்டதை தொடர்ந்து தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக பிடிப்பட்ட பணத்தை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பணத்தை கொண்டு வந்த வசீகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ரூ.40 லட்சம் பணம்  தி.மு.க., பிரமுகரிடம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   


மக்கள் கருத்து

இவன்Apr 15, 2019 - 08:14:49 AM | Posted IP 162.1*****

திராவிட குரூப் எல்லாம் பிராடு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer EducationBlack Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory