» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சனி 13, ஏப்ரல் 2019 12:57:59 PM (IST)கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் பங்கேற்றனர். 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் - பூவனாநாதசுவாமி திருக்கோவில். வெம்பக்கோட்டைய அரசாண்ட செண்பக மன்னன், களக்காட்டினை வெட்டி சீர்படுத்தி செண்பகவல்லியம்மன் திருக்கோவிலையும், கோயிற்புரி என்றழைக்கப்பட்ட கோவில்பட்டி நகரையும் உருவாக்கினார் என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. 

சுவாமி சன்னதி முன்பு 7 நிலைகள் கொண்ட ராஜ கோபுரமும், கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவிழா, ஆடிப்புரவாளைகாப்பு விழா, நவராத்திரி விழா, ஐயப்பசி திருக்கல்யாண திருவிழா, பங்குனிதிருவிழா ஆகியவை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் மிகவும் முக்கியமான திருவிழா பங்குனி பெருந்திருவிழாதான். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்மவார் சங்க மண்டகப்படிதாரர் சார்பில் திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதையெடுத்து சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

இதனை தொடர்ந்து திருத்தேரோட்டத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.மேள தளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்களுடன் முதலில் அம்பாள் திருத்தேரும், 2வதுதாக சுவாமி திருத்தேரும் நான்கு ரதவீதிகளில் இழுக்கப்பட்டது. பக்தர்களின் கூட்ட வெள்ளத்தில் 2 திருத்தேர்களும் உலா வந்தது நிலையை அடைந்தது. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மறுநாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory