» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதி திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனி 13, ஏப்ரல் 2019 12:49:00 PM (IST)

தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.  

தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டும், பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பின்னர், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் காலமானதால், அந்த தொகுதியும் காலியானது. 

அதன்பின்னர், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : வருகிற மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களாக 
  • சூலூர் - பொங்கலூர் நா. பழனிசாமி 
  • அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
  • திருப்பரங்குன்றம் - டாக்டர் பி சரவணன்
  • ஓட்டப்பிடாரம் - எம்.சி.சண்முகய்யா  
ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory