» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிச்சயித்த திருமணத்தை நிறுத்தியதால் பெண்ணின் தாயார் மீது தாக்குதல் : வாலிபர் கைது

சனி 13, ஏப்ரல் 2019 11:14:41 AM (IST)

தூத்துக்குடியில் நிச்சயித்த திருமணத்தை நிறுத்தியதால் மணப்பெண்ணின் தாயார் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் தீபக் (26). இவருக்கும், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. ஆனால், மாப்பிள்ளையின் நடத்தை சரியில்லை என்று கூறி பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்களாம். இதற்கு மணப்பெண்ணின் தாயார்தான் காரணம் என்று கருதி தீபக், அவரை வீடுபுகுந்து தாக்கியுள்ளார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து, தீபக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes



New Shape Tailors

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory