» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக கூட்டணிக்கு விஸ்கர்மா அமைப்புகள் ஆதரவு

சனி 13, ஏப்ரல் 2019 11:05:37 AM (IST)மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தூத்துக்குடி மாவட்ட விஸ்கர்மா சமுதாய அமைப்புகள் ஆதரவளித்துள்ளன. 

சாத்தான்குளத்தில் ஹரிஓம் இந்து சேவா சங்கம் மற்றும் மாவட்ட விஸ்கர்மா சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. ஹரிஓம் இந்து சேவா சங்க நிறுவனத் தலைவர் பொன்மணி தலைமை வகித்தார். மாநில தலைவர் மூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் திருக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வசந்தகுமார் வரவேற்றார். 

கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கணவர் சவுந்திரராஜன், சாத்தான்குளம் நகர பாஜக தலைவர் ராம்மோகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நகைத்தொழிலாளர்கள், பொற்கொல்லர்களுக்கு வாழ்வு அளிக்கும் வகையில் திட்டங்கள் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 6அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ள பாஜக கூட்டணி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுவது என உறுதி அளிக்கப்பட்டது. 

சங்கத் தலைவர் பொன்மணி பேசுகையில், எங்களது விஸ்வகர்மா சமுதாயம் குறித்து அனைத்து கட்சியினரிமும் முறையிட்டுள்ளோம். யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. தற்போது பாரதிய ஜனதாவிடம் எங்களது வாழ்வாதார கோரிக்கையை வைத்துள்ளோம். அவர்கள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர். நலிவடைந்துள்ள நகைத்தொழிலாளர்களை வங்கி அப்ரைசராக நியமிக்க வேண்டும். நகை மற்றும் பொற்கொல்லர்கள் தொழிற் வாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு தனியாக தொழிற்மையம் அமைத்து தரவேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கரநாராயணமுத்து, வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துலட்சுமணன், துணை செயலாளர் ராமசெல்வம், பொருளாளர் லோகநாதன், மாவட்ட புறநகர் செயலாளர் சிவபேச்சிமுத்து, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் ஆறுமுகநயினார், உள்ளிட்ட ஹரிஓம் சங்க, விஸ்வகர்மா சமுதாய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

Tuty மணியன் பெரிய மண்டையாApr 15, 2019 - 07:56:50 AM | Posted IP 162.1*****

மதவெறி கூட்டணி ஒருபோதும் வெற்றிபெறாது... இங்கு நடக்கிறது மத தேர்தல் அல்ல , சாதி, மதம் கடந்து மக்களுக்காக தேர்தல் ... தாமரை மலரவே மலராது

Tuty மணியன்Apr 13, 2019 - 04:18:40 PM | Posted IP 162.1*****

வரவேற்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory