» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்லேட் வர லேட் ஆனதால் புரோட்டா கடை சூறை: பெண் உட்பட 3பேர் காயம் - 2பேர் கைது

சனி 13, ஏப்ரல் 2019 10:55:52 AM (IST)

தூத்துக்குடியில், ஆம்லேட் வர லேட் ஆனதால் புரோட்டா கடையில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி செல்வநாயகபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குழந்தை ஆழ்வார் (45). இவர், அப்பகுதியில் நைட் கிளப் (புரோட்டா கடை) நடத்தி வருகிறார். நேற்று மாலை நந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த சொரிமுத்து மகன் மலையாண்டி (54) என்பவர் அவரது கடைக்கு புரோட்டா சாப்பிட சென்றாராம். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆம்லேட் வர லேட் ஆனதாம். இதனால் ஆத்திரத்தில் மலையாண்டி தகராறு செய்தாராம். அங்கிருந்தவர்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து மலையாண்டி மகன்கள் சங்கர் (19), சக்திகணேஷ் (18), அவரது நண்பர்கள் சிவலிங்கம் மகன் லிங்கமணி (22), அகஸ்டின் பாலா ஆகிய 6பேரும் சென்று புரோட்டா கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். 

மேலும், அங்கு வேலைபார்க்கும் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த சண்முகைய்யா மகன் சரவணகுமார் (16), சுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமி (69), மற்றும் கடையின் உரிமையாளர் குழந்தையாழ்வார் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த மூவரும் தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து மலையாண்டி, லிங்கமணி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் 4பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து

நிஹாApr 13, 2019 - 11:06:03 AM | Posted IP 162.1*****

புரோட்டா வர தாமதமாவதற்கு கடையை நொறுக்கினீர்கள் சரி. உங்களுடைய உரிமையை தர மறுக்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வீர்கள். இளைத்தவனை மட்டும்தானே நமக்கு அடித்து பழக்கம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education



Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory