» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

சனி 13, ஏப்ரல் 2019 10:25:02 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

கோவையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்து கொண்டிருந்தது. 5 மணியளவில் மீளவிட்டானையடுத்த சின்னக்கண்ணுபுரம் அருகே ரயில் வரும்போது, வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் அடிபட்டு இறந்து கிடந்தவர் தூத்துக்குடி சின்னக்கண்ணு புரத்தைச் சேர்ந்த சூசைமுத்து மகன் பிரான்சிஸ் (30) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


CSC Computer Education


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory