» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றம்: 18ம் தேதி தேரோட்டம்!!

திங்கள் 8, ஏப்ரல் 2019 4:28:11 PM (IST)தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 18ம் தேதி நடக்கிறது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (ஏப்.9ம் தேதி) தொடங்கி 18ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. நாளை காலை கொடியேற்றம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, நாளை காலை 7.35 மணிக்கு கொடிப்பட்டம் வீதியுலா நடைபெறுகிறது. 10.45 மணியிலிருந்து 11.30 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

3ஆம் திருநாளான 11ம் தேதி காலை 8.45 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடக்கிறது. 7ஆம் நாள் திருவிழா 15ம் தேதி காலை 6.15 முதல் 7.20க்குள் நடராஜ பெருமானுக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. 10 நாள் திருவிழாவான 18ம் தேதி அன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. காலை 7.45 மணிக்கு அன்னை பாகம்பிரியாள் - சங்கரராமேஸ்வரர், சிறிய தேரில் விநாயகரும், முருகனும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடக்கிறது. தேருக்கு முன்பாக யானை, நாட்டுப்புறக் கலைஞர்களின் பொய்கால் குதிரை ஆட்டம், கும்மியாட்டம்,சிலம்பாட்டம், கேரள சென்டை மேளம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மேலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடக்கிறது. தினமும் சுவாமியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடக்கிறது. தினமும் மாலை சுவாமி அம்பாளும் பூங்கோயில் சப்பரம், பித்தளை சப்பரம், புருஷ வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், கர்ப்பக விருட்சக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம், கமல வாகனம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலசுப்பிரமணிய ராஜன், செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பிரதான பட்டர்கள் செல்வம், ராஜூ, சண்முகம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

குமார்Apr 8, 2019 - 04:31:47 PM | Posted IP 162.1*****

ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory