» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுமுறை தினங்களிலும் மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும் : ஆணையர் தகவல்

வியாழன் 28, மார்ச் 2019 5:25:09 PM (IST)

தூத்துக்குடியில் விடுமுறை தினங்களிலும் மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும் என மாநகாட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர்கட்டணம், தொழில்வரி, கடைவாடகை, மற்றும் உரிமையாணை கட்டணம் ஆகியவற்றை நடப்பு நிதியாண்டின் இறுதிநாளான 31-3-2019க்குள் மாநகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்த வேண்டும். 

எனவே பொதுமக்கள் வசதிக்காக வருகின்ற 30-3-2019 மற்றும் 31-3-2019 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய வாரத்தின் இறுதி நாட்களான அலுவலக விடுமுறை தினங்களிலும் மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படுமென ஆணையர் (ம) தனி அலுவலர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Nalam PasumaiyagamCSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory