» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிக்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி : கனிமொழி கருணாநிதி பேட்டி

திங்கள் 25, மார்ச் 2019 5:54:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் தான் வெற்றி பெற்றால் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்வேன் என வேட்பு மனு தாக்கலுக்கு பின் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்வேன். இங்கு புதிய தொழிற்சாலைகள் துவங்படவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. 

குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நீர் மேலாண்மை சரியாக செய்யப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சனைகளையும் பாராளுமன்றத்தில் பேசி சரி செய்ய முயற்சிப்பேன். யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக தனது தனித்தன்மை, கொள்கைகளை இழந்தது கிடையாது. பாஜக ஒரு மத வழிபாட்டுக்கு துணை செல்கிறது. அதையும் அவர்கள் வழியில் திணிக்கிறது. அதிமுகவினர் ஜெயலலிதாவின் கொள்கைகளை விட்டுவிட்டனர்.

இப்பகுதி பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு பல்லாயிரக்கான மனுக்கள் வந்துள்ளது. தூத்துக்குடி விமானநிலையம் முதலில் விரிவாக்கம் செய்யவும் பிறகு தொழில்வளர்ச்சியை கருத்தில் கொண்டு பன்னாட்டு விமான நிலையம் ஆக மாற்ற முயற்சி எடுக்கப்படும். சேது சமுத்திரதிட்டம் குறித்து மீனவர்களிடம் தவறான கருத்துகள் பரப்பபடுகிறது. இது இயற்கையை பாதிக்காத திட்டம் என மீனவர்களிடம் பேசி விளக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிMar 26, 2019 - 02:07:34 PM | Posted IP 141.1*****

எல்லாத்தையும் ஒரே நாளில் கிழிக்கமுடியாது முட்டா சாமி

சாமிMar 25, 2019 - 10:39:12 PM | Posted IP 108.1*****

பத்து வருசமா இருந்தீர்களே - என்ன கிழிச்சீகலாம் - புதுசா கிழிக்கிறதுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsBlack Forest Cakes

Joseph Marketing

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications

Thoothukudi Business Directory