» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வேட்பு மனு தாக்கல்

திங்கள் 25, மார்ச் 2019 3:46:38 PM (IST)


தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  மேலும், பாஜக, நாம் தமிழர் கட்சி உட்பட 17பேர் இன்று ஒரே நாளில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இன்று 7ஆவது நாள் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கனிமொழி இன்று 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் மனுக்களை சமர்ப்பித்தார். அவரது வேட்பு மனுவை திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலளார் ஆனந்தசேகரன், திருச்செந்தூரைச் சேர்ந்த செங்குளி ரமேஷ், ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் முன் மொழிந்தனர். மாற்று வேட்பாளராக விளாத்திகுளம் நகரச் செயலாளர் வேலுச்சாமி மனுதாக்கல் செய்தார். 

மனுதாக்கலின் போது மாவட்ட செயலளார்கள் கீதாஜீவன் எம்எல்ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், சிபிஎம் மாவட்ட செயலளார் அர்ஜூணன் கூட்டணிகட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கலைமுன்னிட்டு திமுகவினர் ராஜாஜி பூங்கா முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஆனால், வஉசி கல்லூரி கல்லூரி அருகே சென்றபோது போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 

நாம் தமிழர் கட்சி 

இதுபோல் நாம் தமிழர் கட்சி கட்சி சா்பில் கிரிஸ்டன் டை ராஜசேகர் வேட்புமனுதாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக வேல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மாவட்டச் செயலளார் எம்ஆர் கனகராஜ் மனுதாக்கல் செய்தார். 

மேலும், சுயேட்சை வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த ராம்குமார் நாயுடு, தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த அன்டோ கிளாரி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொன்ராஜ், ஜெர்மனஸ், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, பேரூரணி ஜெயகணேஷ், பிரதீப் கணேசன், உடுமலை பேட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், கூட்டாம்புளி பாலமுருகன், அலங்காரத்தட்டு சுபாஷினி மல்லத்தி உட்பட 17பேர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து

சாமிMar 27, 2019 - 12:24:31 PM | Posted IP 162.1*****

மக்கள் எழுச்சி இவர்களை முழுக செய்யும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory