» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் எனது கனவு : தமிழிசை பேட்டி

திங்கள் 25, மார்ச் 2019 3:21:07 PM (IST)

தூத்துக்குடியின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் எனது கனவு என பாஜக வேட்பாளர் தமிழிசை கூறினார். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "ஸ்டெர்லைட் பிரச்சனையில் பாஜக - அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மக்கள் இல்லை. ஆனால், இந்த பிரச்சனையை திமுகவினர் திசைதிருப்பி வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்பாராத சம்பவம். மக்களை வெளியில் இருந்து வந்த சிலர் மூளைச் சலவை செய்து திசைதிருப்பிவிட்டனர். 

மீனவர் பகுதி மட்டுமல்லாமல் தூத்துக்குடியின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் எனது விருப்பம். அதுதான் எனது கனவு. தூத்துக்குடியின் இயற்கை வளத்தை பயன்படுத்தி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை டாக்குமென்ட்ரியாக உருவாக்கியுள்ளேன். நான் தேர்தலில் வெற்றிபெற்றால் அதனை செயல்படுத்த உள்ளேன். என் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. மற்றவர்கள் போல் ஊழல் வழக்கில் சிறை சென்றதில்லை. அதனால் தூத்துக்குடி மக்கள் என்னை தேர்வு செய்வார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே நாடு அறியும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணிக்கே வெற்றி. நாற்பதும் நமேத, நாளை நமதே, நாடும் நமதே என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

சாமிMar 30, 2019 - 10:07:25 AM | Posted IP 172.6*****

தாமரைக்கு வாக்களிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று காத்து இருந்தேன் - இறைவன் அந்த தருணத்தை கொடுத்துவிட்டான் - பாரத் மாதா கி ஜெய்

இவன்Mar 26, 2019 - 12:23:27 PM | Posted IP 162.1*****

வெற்றிகரமான தோல்வி பெற வாழ்த்துக்கள்

மக்களில் ஒருவன்Mar 26, 2019 - 11:52:06 AM | Posted IP 141.1*****

வாழ்க வளமுடன் வெற்றி உறுதி

குமார்Mar 25, 2019 - 05:52:55 PM | Posted IP 162.1*****

பேசு வாய் கிலியும் வரை பேசு.

தூத்துக்குடி மக்கள்Mar 25, 2019 - 05:01:30 PM | Posted IP 162.1*****

எங்கள் வாக்கு உங்களுக்குத்தான். பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory