» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்பு மனு தாக்கல்

திங்கள் 25, மார்ச் 2019 1:22:13 PM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜக தலைவர் தமிழிசைசௌந்தரராஜன் இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டு அதில் வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சந்தீப் நந்தூரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். இதில் ஒரு மனுவை தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி முன்மொழிந்தார். மற்றொரு மனுவை பாஜக வர்த்தக அணி செயலாளர் சிவராமன் முன்மொழிந்தார். 

வேட்பு மனு தாக்கலின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் அரசகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் இருந்து அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மேளதாளம் முழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தனர். ஆனால் வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் மற்றவர்கள் ஆட்சித்தலைவர் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அவன்Mar 26, 2019 - 03:18:57 PM | Posted IP 61.3.*****

தமிழன் இவங்க ஜெயிக்க போறது இல்ல தமிழன் பின்ன என் நேரத்தை வீணடிக்கிங்க

இவன்Mar 26, 2019 - 12:17:40 PM | Posted IP 162.1*****

வெற்றிகரமான தோல்வி பெற வாழ்த்துக்கள் .

தமிழன்Mar 25, 2019 - 08:32:17 PM | Posted IP 172.6*****

மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest CakesNalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors

Anbu CommunicationsThoothukudi Business Directory