» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வங்கியில் தீ விபத்து: ரூ.3 லட்சம் பொருள்கள் சேதம்

திங்கள் 25, மார்ச் 2019 8:23:44 AM (IST)

சாத்தான்குளம் அருகே இந்தியன் வங்கியில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து பிரதான சாலையில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கம்போல், வங்கியை பணியாளர்கள் மூடிச்சென்றனர். நேற்று பிற்பகலில் வங்கியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. தகவலறிந்த வங்கி மேலாளர் கார்த்திகா, தட்டார்மடம் காவல்துறை, சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் தீயணைப்புபடையினர் வந்து தீயை அணைத்தனர். தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் வங்கியை திறந்து பார்த்தபோது, மேலாளர் அறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான மேலாளர் அறையில் இருந்த 5 கணினிகள், 2 ஏ.சி. சாதனங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu Communications





Thoothukudi Business Directory