» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றுவேன்: கனிமொழி

திங்கள் 25, மார்ச் 2019 8:20:51 AM (IST)

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து திமுக வேட்பாளர் கனிமொழி பேசியது: 

40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற வகையில் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும். விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலும் மிக முக்கியம். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் உணர்ந்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு மக்கள் வர முடியாமல் இருக்க பல காரணங்கள்  இருக்கலாம். ஆனால், மக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்ய வேண்டும். ஆளும் ஆட்சிகளின் மீதான மக்களின் வெறுப்பை, ஏமாற்றத்தை வாக்குகளாக மாற்ற வேண்டும். 

நான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி எடுப்பேன். பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன். விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் சந்தைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார். நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.சி.ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் பொன். முத்துராமலிங்கம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Mar 25, 2019 - 08:34:46 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும்...அப்பொழுதுதான் தூத்துக்குடி நகரம் வளர்ச்சி அடையும்...தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு நெரிசலும் குறைக்கப்படும்....

கே ஏ முருகன்Mar 25, 2019 - 07:07:47 PM | Posted IP 172.6*****

நீங்களெல்லாம் புதியவர்களுக்கு வழிவிடுவது நல்லது

தமிழ்ச்செல்வன்Mar 25, 2019 - 06:19:59 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட்டை மூடுவேன் என்று எந்த வாக்குறுதியும் தரவில்லையே! ஏன்?

அறிவாளிMar 25, 2019 - 06:06:39 PM | Posted IP 162.1*****

அடுத்த வேலை ஆட்டை போடுவது எப்படி என்பதே திமுகவின் திட்டம்?? 10 வருசமாக திமுக தூத்துக்குடியில் ஆட்சி இருந்தபோது சரியில்லையாம் ...மக்களே இனி எல்லா முட்டாளை தேர்ந்தெடுக்க வேண்டாம் .. நோட்டாவுக்கு போட்டு போங்க ...

குருMar 25, 2019 - 05:21:50 PM | Posted IP 172.6*****

1ஆம் கேட் சப் வே அமைக்க நடவடிக்கை எடுங்க.

நல்லவன்Mar 25, 2019 - 05:04:19 PM | Posted IP 162.1*****

இப்போது இருப்பது அகல ரயில் பாதைதான் . மீட்டர் கேஜ் எங்கும் கிடையாது

மாயா குமார்Mar 25, 2019 - 03:18:18 PM | Posted IP 162.1*****

இரண்டாம் கேட் நான்காம் கேட் இரண்டு கேட் அமைப்புக்கும் பாலம் அமைப்பது சாத்தியமாகும் இதில் மக்கள் நலன் கொண்டு செயல் படும் அமைப்பு எந்த அரசு என்பது ?.........

ASRAFMar 25, 2019 - 02:07:22 PM | Posted IP 172.6*****

5G

ASRAFMar 25, 2019 - 02:06:58 PM | Posted IP 172.6*****

இப்ப கூட சட்ட மன்ற உறுப்பினர் தி மு க தான்... ஒன்னும் நடக்கலையே ...

2 ம் கேட்Mar 25, 2019 - 10:53:22 AM | Posted IP 162.1*****

முதல்ல தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் ஒரு வழி பண்ணுமா. ஓயாம கேட் அடைக்குறானுக.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory