» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு

வெள்ளி 15, மார்ச் 2019 12:33:03 PM (IST)

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் அருகே மோட்டார் பைக் மீது வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி 3ஆவது மைல் கந்தன் காலனியைச் சேர்ந்தவர் ராமர் மகன் முத்துகுமார் (20). இவர் கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இன்று காலை  9மணியளவில் தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாளை ரோட்டில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சர்வீஸ் ரோட்டில் இடபுதுறமாக திரும்பும்போது தூத்துக்குடியில் இருந்து தட்டபாறை நோக்கிச் சென்ற வேன் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துகுமார் மீது, வேனின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் அண்ணாநகரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications



New Shape Tailors


Black Forest Cakes

Joseph Marketing




Thoothukudi Business Directory