» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

வெள்ளி 15, மார்ச் 2019 11:13:30 AM (IST)தேர்தலில் அதிமுகவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், இணைச் செயலாளர் கோகிலா, துணைச் செயலாளர் செண்பக செல்வன், தமிழரசி, பொருளாளர் ஜெபராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி, வக்கீல் முனியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கலந்துக் கொண்டு மாநகர வடக்கு பகுதிக்குட்பட்ட வட்ட கழக நிர்வாகிகளை ஒவ்வொரு வார்டாக நேரில் அழைத்து பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன்,  மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி, மகளிரணி செரினாசி.த.பாக்கியராஜ் உட்பட திரளான கழகத்தினர் கலந்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி மக்கள்Mar 15, 2019 - 04:13:00 PM | Posted IP 162.1*****

எங்கள் வாக்கு பிஜேபி தமிழிசைக்குத்தான்

ராமநாதபூபதிMar 15, 2019 - 01:07:31 PM | Posted IP 162.1*****

என்ன ஆலோசனை. தமிழிசையை எப்படி எத்தனைவாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பது என்று தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Joseph Marketing

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

New Shape Tailors


CSC Computer EducationThoothukudi Business Directory