» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியர் பங்கேற்பு

வெள்ளி 15, மார்ச் 2019 11:03:44 AM (IST)தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் / சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 11,000 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்தள வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், சக்கர நாற்காலி மற்றும் வாக்களிக்க ஏதுவாக தனியாக வரிசை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பார்வையற்றவர்கள் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மூலம் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சீட்டு, பேலட் பேப்பர், கையேடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாக்களிப்பது உங்களின் கடமை மற்றும் ஜனநாயக உரிமை என்பதால் நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக பயன்படுத்தவுள்ள சில்வர்புரத்தில் உள்ள தூத்துக்குடி நாசரேத் திருமண்டபம் அறக்கட்டளை நடுநிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .ஜெயசீலி, லூசியா சங்கம் இயக்குனர் அருட்பணி.கிராசிஸ் மைக்கேல், லூசியா தலைமை ஆசிரியர் பெர்க்மான்ஸ், தேர்தல் களப்பணி அலுவலர் அனிதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்இது போல் தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றார். மேலும், கல்லூரி வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களை உள்ளடங்கிய ரங்கோலி போட்டி மற்றும் சிறந்த வாசகங்கள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயங்களை வழங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குப்பதிவு அவசியம் குறித்து கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். பின்னர் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தெருக்கூத்து மற்றும் விழிப்புணர்வு நடனத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் .சத்யபாமா, பேராசிரியை பழனி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingBlack Forest Cakes

New Shape TailorsNalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory