» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விதிகளை கடைபிடிக்க ஆட்சியர் உத்தரவு : திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை

வெள்ளி 15, மார்ச் 2019 10:13:43 AM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டபம் உரிமையாளர்கள் / நகை அடகு பிடிப்பேர் / வட்டி தொழில் செய்வோர் / அச்சக உரிமையாளர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்ததையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலில் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரின் கூட்டம் நடைபெறும்பட்சத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்னரே திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களுடைய மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். 

அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினரின் அனுமதி மட்டும் பெற்று திருமண மண்டப உரிமையாளர்கள் அனுமதி அளிக்கக்கூடாது. திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தில் கூட்டம் நடைபெறுவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் கண்காணிப்பு அலுவலர்களால் முழுமையாக வீடியோ கவரேஜ் செய்யப்பட்டு அத்துணை செலவுகளும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 1950 மற்றும் ஊ ஏபைடை யுpp மூலமும் பெறப்படும் புகார்களின்மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமண மண்டப முன்பதிவு தொடர்பான பதிவேடுகளை முழுமையாக பராமரிக்க வேண்டும். திருமண மண்டப முன்பதிவிற்கு முன்னரே அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள் உரிய அனுமதியை பெற்று மண்டப உரிமையாளர்களிடம் வழங்கி முன்பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அனுமதிகள் தேர்தல் ஆணையத்தின சுவேதா அப் மூலம் இணையதளத்தில் எந்த நேரமும் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாகவே உரிய அனுமதி வழங்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி இல்லை. பணம் எடுத்து செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும். ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசுபொருட்கள், மதுபானங்கள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 இலட்சத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். மேற்கண்ட பல விதிமுறைகள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, நகை அடகு பிடிப்போர் / வட்டி தொழில் செய்வோர் ஆகியோர் தங்கள் கணக்குகளை முறையான ஆவணங்களுடன் பராமரிக்க வேண்டும். மேலும், ரூ.1 இலட்சத்திற்கு மேல் பணம் பெறுபவர்கள் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். 

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / தேர்தல் செலவு குழு ஆகியோர் விபரங்களை கோரும் சமயத்தில் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகள் உள்ளதால் வழக்கமானதைவிட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சிடும்போது, யாரிடமிருந்து அச்சிடும் பணி பெறப்பட்டதோ அவர்களின் விவரங்களை பெற்று முறையாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். மேலும், அச்சக உரிமையாளர்கள் விளம்பரங்கள் செய்யும் அரசியல் கட்சியினரிடம் இருந்து உரிய முறையில் எழுத்துபூர்வமாக உறுதிமொழியை பெற வேண்டும். அதற்கு 2 நபர்கள் சாட்சியம் பெற வேண்டும். மேலும், விளம்பர பதாகைகளில் அச்சகம் பெயர் முகவரியுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும். 

போஸ்டர்கள் அச்சடித்தது எண்ணிக்கை மற்றும் கட்டணம் மற்றும் உறுதிமொழி கடிதம் விபரங்களுடன் 4 தினங்களுக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும். விளம்பர போஸ்டர்கள் மட்டுமின்றி தயார் செய்து கொண்டு வரப்படும் நோட்டீஸ்களை அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து கொடுப்பவர்களுக்கும் இவ்விதிமுறைகளே பொருந்தும். தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர்களிடம் சான்றிதழ்கள் பெற்ற பின்னரே விளம்பர பதாகைகளை வைக்க அனுமதிக்கப்படும். உரிய அனுமதி பெறாமல் விளம்பரம் அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து 6 மாதம் வரை தண்டனை விதிக்க நேரிடும். 

தேர்தல் விதிமீறல்களை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அனைவரும் தெரிந்துகொண்டு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடைமுறைப்படுத்தும். எனவே அனைவரும் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பேசினார். கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத்சிங்கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes


Joseph Marketing

New Shape Tailors
Anbu CommunicationsThoothukudi Business Directory