» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம் பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது

வெள்ளி 15, மார்ச் 2019 8:36:35 AM (IST)

தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ஒரு செல்போன் எண்ணிலிருந்து தனக்கு மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்பி முரளி ரம்பா உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார், அந்த மர்ம நபரின் செல்போனை ட்ராக் செய்து கண்டுபிடித்தனர்.

அது நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த மாரிதுரை (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் தனது செல்போன் எண்ணில் அந்த பெண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியதும், பின்னர் அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மாரிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Anbu Communications

Joseph Marketing



Thoothukudi Business Directory