» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 15, மார்ச் 2019 8:27:07 AM (IST)

தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்கு முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். எனவே, தேர்தல் பாதுகாப்புப் பணி செய்ய விருப்பம் உள்ள 60 வயதுக்கு உள்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர் மற்றும் இதர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
   
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் விருப்பத்தை தூத்துக்குடி டூவிபுரம் 8 ஆவது தெருவில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என  தெரிவிக்கப் பட்டுள்ளது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer EducationJoseph Marketing

Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory