» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை தாக்கி பலாத்காரம்: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 15, மார்ச் 2019 8:10:45 AM (IST)

பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி அருகே உள்ள வீரநாயக்கன்தட்டை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சிவக்குமார் (22). இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியனில் பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு விடுமுறையில் அவர் ஊருக்கு வந்தார். கடந்த 14-8-2014 அன்று ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிவக்குமார், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் சக்திவேலுவுடன் (25) சுற்றிக் கொண்டு இருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். 

உடனே சிவக்குமார், சக்திவேல் ஆகிய 2 பேரும் அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் சிவக்குமார், சக்திவேல் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், சிவக்குமாருக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம், சக்திவேலுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுபாஷினி ஆஜர் ஆனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Joseph Marketing


New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory