» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மொபட் மீது வாகனம் மோதி கணவன் பலி: மனைவி படுகாயம்

வெள்ளி 15, மார்ச் 2019 8:08:35 AM (IST)

சாத்தான்குளம் அருகே மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம், மோதிய விபத்தில் கணவன் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியுடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொபட்டில் வந்து கொண்டிருந்தார். சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. 

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜின் மீது அந்த வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தலை, காலில் பலத்த காயம் அடைந்த ஜக்கம்மாள் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஜக்கம்மாளுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இட்டமொழி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். சாத்தான்குளம்-இட்டமொழி மெயின் ரோட்டில் மின்வாரிய அலுவலகம், யூனியன் அலுவலகம், அரசு கல்லூரி, கல்வியியல் கல்லூரி போன்றவை உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்த சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் 10-க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள், ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கருடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Joseph Marketing



Thoothukudi Business Directory